பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய மிசோரம் அரசு மீண்டும் தடை
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் துவங்கி உள்ளதால், பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய மிசோரம் அரசு மீண்டும் தடை வித்தித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மிசோரமில் கடந்த 2020-ல் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவியதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டும் மார்ச் முதல் நவம்பர் மாதம் வரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகள் பலியானகின. இந்நிலையில் நடப்பு ஆண்டில் இதுவரை 384 பன்றிகள் உயிரிழந்த தை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் நீக்கப்பட்ட தடை இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Comments