ஷாங்காய் நகரில் வாழும் 2.60 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு.!

0 1527

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அந்நகரில் வாழும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கோவிட் பரிசோதனை செய்ய ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீன ராணுவம் சார்பில் வெளியாகும் நாளிதழின் செய்தியின் படி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள், ராணுவ படையினர் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஷாங்காய் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி ஷாங்காயில் 9 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments