எகிப்தில் ஒரே வாரத்தில் 90 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி 100க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் படகில் சென்ற போது படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களில் 4 பேரை பிரான்சின் சர்வதேச கடல் எல்லையில் எண்ணெய் கப்பல் மீட்டுள்ளது. மற்ற தொழிலாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, ஜனவரி 1 முதல் மார்ச் 28 வரை மத்திய தரைக்கடல் வழித்தடத்தில் சுமார் 300 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments