உக்ரைன் தலைநகரில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுப்பு.!

0 2476

உக்ரைன் நாட்டு தலைநகர் கிவ்வில் பொதுமக்களில் 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 42 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஐநா அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

கிவ், கார்கிவ் மற்றும் செர்னிகிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படையினர் பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்திருக்கலாம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments