அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் உயிரிழப்பு

0 1579
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அவனைத் தேடி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை. குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments