ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது அமெரிக்கா.!
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் மிகைல் போபோவ் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வருவதோடு 43 விழுக்காடு வரை அதிகரிக்கவும் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பீப்பாய்கள் வரை ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை அமெரிக்கா வாங்கி வருகிறது.
மேலும் அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் ரஷ்யாவிடமிருந்து உரங்களையும் அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Comments