பிரான்சில் உறை பனியில் திராட்சைக் கொடிகளை காக்க நூதன முயற்சி.!
பிரான்சின் சாப்ளிஸ் நகரில் உறை பனியில் இருந்து திராட்சைக் கொடிகளை காக்க தீப் பந்தங்கள் மற்றும் தீச் சட்டிகளால் செடிகளுக்கு கதகதப்பு அளிக்கப்படுகிறது.
ஒயின் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற பிரான்சில் நிலவும் உறை பனியால் திராட்சை சாகுபடி பின்னடைவை சந்தித்துள்ளது. பனியில் திராட்சைக் கொடி உறையாமல் இருக்க செடிகளை சுற்றி தீ பந்தங்கள் கொளுத்தப்பட்டு வருகின்றன.
கதகதப்பின் மூலம் உறை பனியில் திராட்சை பயிர் கெடாமல் இருப்பதை தவிர்க்க முடியும் என பண்ணை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments