இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் 417.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிப்பு.!
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் 417.8 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியப் பொருளாதாரம் பல சாதனைகளை முறியடிக்கும் வகையில் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இது இந்தியாவின் ஏற்றுமதி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனை முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 14.53 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments