பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் எதிர்க்கட்சிகளால் அறிவிப்பு

0 2701
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் எதிர்க்கட்சிகளால் அறிவிப்பு

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப்பை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன...

பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது.

அந்த தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயர் நிராகரித்த நிலையில், அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்ததால், பாகிஸ்தான் அரசியலில் குழப்பங்கள் நிலவுகிறது.

தீர்மானம் நிராகரிக்கப்பட்ட பின், மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டிய எதிர்க்கட்சிகள், துணை சபாநாயகரின் உத்தரவு செல்லாது என அறிவித்தது மட்டுமின்றி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்பை புதிய பிரதமராகவும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

முன்னதாக, 197 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் எம்பியான ஆயாஸ் சாதிக் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஷெரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் இருக்கையில் சாதிக் அமர்ந்த பிறகு, அவர் இம்ரான் கான் அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை மீண்டும் கொண்டுவந்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியதை அடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற விதிகளின்படி, அவை ஒத்திவைக்கப்பட்டால் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் மட்டுமே மீண்டும் அவையை கூட்ட உத்தரவிட முடியும். இந்நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, எதிர்க்கட்சிகள் மீண்டும் கூட்டி புதிய பிரதமரை அறிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments