பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

0 3350
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

சென்னை பாரிமுனையில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

59ஆவது வார்டு திமுக நிர்வாகியான சௌந்தரராஜன், பிராட்வே பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த சௌந்தரராஜன் அங்கு திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்திறங்கிய கும்பல் திடீரென சௌந்தரராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. வியாசர்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான கணேசனுக்கும், திமுக பிரமுகரான சௌந்தரராஜனுக்கும் இடையே ஏற்கனவே கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பது, பேருந்து நிலையத்தில் கடை நடத்துவது தொடர்பாக தகராறு நடந்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று போலீசார் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பிய நிலையில், சௌந்தரராஜன் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, கணேசனும் தலைமறைவானதாக சொல்லப்படுவதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments