இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள், உணவுகள் இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் - இலங்கைக்கான இந்தியத் தூதர்

0 2092
இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள், உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடன் வசதி, எரிபொருள், உணவுகள் ஆகியவை இலங்கை மக்களுக்கு உயிர்நாடியாக விளங்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான விமான எரிபொருள், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை பிப்ரவரி முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மற்றோரு 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானதாக அவர் கூறினார்.

இந்நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, இந்தியா - இலங்கை இடையிலான விமான சேவையை குறைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வாரம் 16 விமானங்கள் தற்போது இயக்கப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை வரும் ஒன்பதாம் தேதி முதல் 13ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments