திருப்பதியில் முதல் முதல்முறையாக பெண்களுக்காக பிரத்யேக ஆட்டோக்கள் அறிமுகம்
ஆந்திராவின் திருப்பதியில் முதல் முதல்முறையாக பெண்களுக்காக பிரத்யேக ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளி - கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி எம்.எல்.ஏ., புமன கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்டோக்களை முழுவதும் பெண்கள் மட்டுமே ஓட்டும் நிலையில், முதற்கட்டமாக திருப்பதி பேருந்து நிலையம், மகளிர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ராஷ்டிரிய சேவா சமிதி என்ற அரசு சாரா அமைப்பு, ஆட்டோக்களை இயக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் நிலையில், இதுவரை திருப்பதி முழுவதும் 150 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments