புத்தம் புதிதாக வாங்கிய புல்லட் பைக்.. திடீரென வெடித்து சிதறிய சம்பவம்..

0 3056
ஆந்திராவில் புத்தம் புதிதாக வாங்கிய புல்லட் பைக்கிற்கு பூஜை போடும் போது பைக் தீப்பிடித்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் புத்தம் புதிதாக வாங்கிய புல்லட் பைக்கிற்கு பூஜை போடும் போது பைக் தீப்பிடித்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கசாபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ஒரு லட்சத்து 80ஆயிரம் ரூபாய்க்கு ராயல் என்பீல்டு புல்லட் பைக் வாங்கியிருக்கிறார்.

ஷோரூமில் இருந்து பைக்கை டெலிவரி எடுத்த கையோடு, பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்பிவிட்டு, அங்கிருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சூடம் ஏற்றி பூஜை போட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது, பைக்கில் திடீரென தீ பிடிக்கவே பூஜை போட்டுக் கொண்டிருந்தவர் பைக்கை விட்டு தள்ளி நின்று, தீயை அணைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பைக் பெரும் சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

பைக் முழுவதும் தீக்கிரையான நிலையில், பைக் தீப்பிடித்து வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments