ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலையின் கட்டுமான பணிகள் நிறைவு...!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 145 அடியில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் நுழைவு வாயில் பகுதியில் உள்ள முருகர் சிலை 140 அடி உயரம் உடையது.
இந்நிலையில் அதை விட 5 அடி அதிக உயரமுடைய முருகர் சிலை ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையத்தில் அமைக்கப்பட்டு வந்த சூழலில் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முருக பக்தரான ஸ்ரீதர் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இந்த முருகர் சிலையை அமைத்துள்ளார்.
Comments