விமான டிக்கெட் முதல் மளிகை பொருட்களை வரை ஆன்லைன் ஷாப்பிங்.. வருகிறது டாடா குழுமத்தின் "டாடா நியூ" செயலி

0 2327
விமான டிக்கெட் முதல் மளிகை பொருட்களை வரை ஆன்லைன் ஷாப்பிங்.. வருகிறது டாடா குழுமத்தின் "டாடா நியூ" செயலி

விமான டிக்கெட் முதல் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது வரை டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளையும் உள்ளடக்கிய "டாடா நியூ" (Tata Neu) என்ற ஒற்றை செயலியை, அந்நிறுவனம் வரும் 7-ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

ஏர் இண்டியா, ஏர் ஏசியா விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது, தாஜ் குழும விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்வது, பிக்பாஸ்கெட்-டில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது, குரோமா ஸ்டோரில் மின்சாதன பொருட்களை ஆர்டர் செய்வது உள்பட பல்வேறு ஆன்லைன் சேவைகளை டாடா குழுமம் வழங்கி வருகிறது.

அவை அனைத்தையும் டாடா நியூ என்ற ஒற்றை செயலி மூலம் ஒருங்கிணைத்த டாடா நிறுவனம் அதில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு,  நியு காயின்கள் என்ற பெயரில் வெகுமதி வழங்க உள்ளது.

அமேசான், பேடிஎம், ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே பல்வேறு சேவைகளை அடக்கிய சூப்பர் ஆப்களை அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், 7-ந் தேதி முதல், டாடா குழுமமும் நியு செயலி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய பரிணாமத்தில் களமிறங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments