"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வாகன சோதனையின் போது போலீசாரைக் கண்டு தப்பி ஓடிய நபரைத் துரத்திப் பிடித்த போலீசார்... ரூ.50 லட்சம் மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல்
இராமநாதபுரத்தில் வாகன சோதனையின் போது தப்பி ஓட முயன்ற நபரிடம் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரக்கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கீழக்கரையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் தப்பித்து ஓட முயன்றவரை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
சுலைமான் என்ற அந்த நபரின் துணிப்பையை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த ஆபரண கற்கள் குறித்து கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவற்றை மதுரைக்கு அனுப்பி பரிசோதனை செய்த போது அவை வைரக்கற்கள் என்பது தெரியவந்தது.
50 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த வைரக்கற்களை பறிமுதல் செய்த போலீசார், உரிய ஆவணங்களை சமர்பித்து விட்டு அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.
Comments