சீனாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 13 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று..
சீனாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 13 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளியன்று புதிதாக 11 ஆயிரத்து 781 பேருக்குத் தொற்று இருந்தது சோதனையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் சாங்காய் நகரம் மற்றும் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சாங்காய் நகரில் பெருமளவிலான மக்களுக்கு அன்டிஜென் சோதனை, நியூக்ளிக் ஆசிட் சோதனை செய்யும் பணிகளை நலவாழ்வுத் துறை முன்னெடுத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க சாங்காயில் ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஆலைகள் மூடப்பட்டுள்ளதுடன், துறைமுகத்தில் சரக்குகளை இறக்க முடியாமல் கப்பல்கள் காத்து நிற்கின்றன.
Comments