கீவ் அருகாமை பகுதிகளை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரைன் தகவல்.!

0 2510

ரஷ்யப் படைகளிடம் இருந்து ஒட்டுமொத்த கீவ் பிராந்தியத்தையும் மீட்டதாக உக்ரைன் துணை ராணுவ அமைச்சர் கன்னா மாலியார் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா தொடர் பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரஷ்யப் படைகள் வசம் இருந்த இர்பின், புச்சா, காஸ்டோமல் பகுதிகள் மீண்டும் தங்கள் வசம் வந்ததாக உக்ரைன் துணை ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கீவ் பிராந்தியம் முழு சுதந்திரம் பெற்றதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் கன்னா மாலியார் கூறினார். தாக்குதல்களில் உருக்குலைந்த நகரங்களை மீட்டெடுக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் நிர்வாகப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments