தேனியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தும் மர்ம நபர்களின் வீடியோ காட்சிகள்.!
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் மர்ம கும்பல் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சின்னமனூர் கம்பம் சாலையில் பாலாஜி என்பவர் இருசக்கர வாகன விற்பனையகம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 31ந்தேதி இவரது கடைக்கு வந்த சிலர் அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதம் மற்றும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கிருந்த இரு ச்சகர வாகனத்தையும் கீழே தள்ளி, விற்பனையகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை தாக்கவும் செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.
Comments