டெல்லியில் சாலையோரம் நின்ற காவலரை அநாயசமாக தூக்கி வீசிய காளை

0 2695

டெல்லியில் சாலையோரம் நின்ற காவலரை காளை ஒன்று அநாயசமாக தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தயாள்பூர் நகரில் சாலையைக் கடந்த காவலர் ஒருவர் சாலையோரம் நின்று செல்போனில் எதையோ படமெடுத்துக் கொண்டு இருந்தார். அந்தவழியாக வந்த காளை திடீரென வந்த வேகத்தில் காவலரை முட்டித் தூக்கி வீசியது.

பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிய காளை சாதுவாக சாலையை கடந்து சென்றது. லேசான காயங்களுடன் காவலர் உயிர் தப்பினார். சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments