100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு பட்டியலில் இடம் பிடித்தார் கவுதம் அதானி.!

0 2294

சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் புதுவரவாக இந்திய பணக்காரர் கவுதம் அதானி இணைந்துள்ளார்.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 7 லட்சத்து 60 ஆயிரம் கோடியை தாண்டியது. எலான் மஸ்க், ஜெப் பெசாஸ் உள்ளிட்டோரை தொடர்ந்து 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் 9-வது இடத்தை அதானி பிடித்தார்.

துறைமுகம், சுரங்கங்கள், எரிசக்தி, விமான நிலையங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் அதானி உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்களில் இருந்து மட்டும் நடப்பு ஆண்டில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளார்.

மற்றொரு இந்திய பெரும் செல்வந்தர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99 பில்லியன் டாலராக குறைந்து அதானிக்கு பின்னால் தள்ளப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments