கல்லூரி மாணவரை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் ; 9 பேர் மீது வழக்குப்பதிவு

0 2924

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு சீனியர், ஜூனியர் தகராறில் குனியமுத்தூர் நேரு கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு மாணவரை கடுமையாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து அரை நிர்வாணமாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.

பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments