ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு தலைமை மருத்துவர் ஆதித்யா தலைமையில் இருவருக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஸ்டீபன் ராஜ், இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்ய வேண்டுமானால் 2.50 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும் எனவும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
Comments