காவிரி ஆற்றில் அலசுவதற்காக வைக்கப்பட்டிருந்த 10 டன் சாயத்துணிகள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் அலசுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் சாயத்துணிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றங்கரைகளில் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், அப்பகுதியிலுள்ள சாயப்பட்டறைகளில் சாயமேற்றும் துணிகளை, பள்ளிப்பாளையம் பகுதிக்கு கொண்டு வந்து இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் அலசப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்த ரகசிய தகவல் கிடைக்கப்பெற்று குமாரபாளையம் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், காவிரி ஆற்றங்கரைக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களைக் கண்டதும் ஆற்றில் துணிகளை அலசிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், துணிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, சுமார் 10 டன் துணிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் எந்த சாயப்பட்டறையைச் சேர்ந்தவர்கள் என விசாரித்து வருகின்றனர்.
Comments