கன்னட, தெலுங்குப் புத்தாண்டான உகாதி இன்று கொண்டாட்டம்

0 2866

மகாராஷ்டிரத்தில் மராத்திய புத்தாண்டான குடி பட்வா பண்பாட்டுச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மக்கள் மேளதாளம் முழங்க ஆடல் பாடலுடன் புத்தாண்டைக் கொண்டாடினர்.

மராத்திய புத்தாண்டுப் பிறப்பான குடி பட்வா இன்று மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனேயில் வீர சிவாஜி சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் ஊர்வலம் நடைபெற்றது.

 புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வீரமங்கை ஒருவர் வாளைச் சுழற்றித் தனது வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தினார்.

 நாக்பூர் கமலா சதுக்கத்தில் மராத்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பெரிய மேளங்களைக் கொட்டி இசைமுழக்கம் நடைபெற்றது.

 நாக்பூர் இலட்சுமி நகரில் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மராத்தியப் புத்தாண்டான குடி பட்வாவையொட்டி மும்பையில் மகளிர் மட்டும் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் பெண்கள் தலைப்பாகை அணிந்து கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments