சீமான் செய்தியாளர் சந்திப்பின்போது, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0 4438

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்கள் சந்திப்பிற்குபின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த நிலையில், ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டதால் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை இடிப்பதாகக்கூறி மக்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களை நேரில் சந்தித்தபின் பேட்டியளித்த சீமான், சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அங்கிருந்த நபர்கள் அவரை விரைவாக அருகில் நின்ற 108 ஆம்புலன்சிற்கு தூக்கிச் சென்றனர்.

இதனை அடுத்து, சீமானுக்கு ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், தான் நலமாக உணர்வதாக கூறி தனது காரிலேயே வீடு திரும்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments