பெட்ரோல் டீசல் விலை உயர்வால் குதிரையில் வேலைக்குப் போகும் மின் ஊழியர்
பெட்ரோல் விலை உயர்ந்து வருவதையடுத்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார்.
பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியைச் சேர்ந்த அபிஜித் திவாரி மின்துறை ஊழியர். குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாவதாக அவர் கூறுகிறார்.
இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்தார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும் குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி விட்டார்
Comments