கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்ற 4பேர் கைது

0 1839
கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்ற 4பேர் கைது

ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்த 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து நாவலூர் சுங்கச்சாவடி அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக 4 இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் 45கிலோ கஞ்சா, 10சவரன் தங்கநகைகள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள், 4 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments