மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் அமெரிக்கா, ஜப்பான் பயணம்
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய் சங்கர் ஆகியோர் வரும் வாரத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 11ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இருவரும் தொடர்ந்து டோக்கியோ சென்று ஜப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் உறுப்பு நாடுகளுடனான கூட்டத்தில் உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இரு தலைவர்களும் எடுத்துரைப்பார்கள் என்றும் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments