ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் வில் ஸ்மித்
ஆஸ்கர் விருதுகளை வழங்கும் சர்வதேச அமைப்பான Academy of Motion Picture Arts and Sciences-ல் உறுப்பினராக வகித்த பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகாடமிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன், ஆஸ்கர் விருது விழாவில் தனது செயல் மன்னிக்க முடியாதது என வேதனை தெரிவித்துள்ளார். ஹாலிவுட் அகாடமி விருது அமைப்பில் இருந்து விலகும் முடிவை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவி குறித்து நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் பேசியதால் அவரது கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வில் ஸ்மித், கிற்ஸ் ராக் விவகாரத்தில் வரும் 18ஆம் தேதி ஒழுங்கு முறை ஆணையம் மூலம் விசாரணை நடத்த அகாடமி திட்டமிட்டுள்ளது.
Comments