அண்ணா நகரில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செயின் பறிப்பு.. சிசிடிவியை ஆய்வு செய்து திருட்டு கும்பலுக்கு போலீசார் வலை

0 1778
அண்ணா நகரில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செயின் பறிப்பு.. சிசிடிவியை ஆய்வு செய்து திருட்டு கும்பலுக்கு போலீசார் வலை

சென்னை அண்ணா நகரில் முதியவர்களை குறிவைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வரும் கும்பலை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

டி பிளாக் பகுதியில் சென்ற விஜயலட்சுமி என்பவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை தாக்கி தங்க சங்கிலியை பறித்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்க முயன்றும் கும்பல் தப்பியோடியது.

அதே பகுதியில் அடுத்தடுத்து இரு வேறு முதிய பெண்மணிகளிடம் இதே கும்பல் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments