ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 41 லட்சம் அப்பாவி மக்கள் வெளியேற்றம்
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து 41 லட்சம் அப்பாவி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 6 வாரத்தை எட்டிய நிலையில் உணவு, உறைவிடம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் குழந்தைகள், பெண்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சொந்த நாட்டை விட்டு 41 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு சென்றதாகவும், அதிகபட்சமாக 24 லட்சம் பேர் போலந்தில் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் தங்கள் உறைவிடத்தை இழந்து கல்வியை தொலைத்து அகதிகளாக மாறியதாக ஐ.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.
Comments