தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு

0 2198

தமிழகத்தில்; மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.   தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியினை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிங்களுக்கான சொத்துவரி 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது . சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது.

சென்னை பிரதான பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 150 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழகத்தின் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 15 வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments