10 வச்சா 20…! 20 வச்சா 40…! நம்பி ரூ 4 ¼ கோடியை அள்ளிவைத்த ரிமி சென்..! 420 பாய் பிரண்டு எஸ்கேப்..!

0 9586
10 வச்சா 20…! 20 வச்சா 40…! நம்பி ரூ 4 ¼ கோடியை அள்ளிவைத்த ரிமி சென்..! 420 பாய் பிரண்டு எஸ்கேப்..!

பிரபல நடிகை ரிமி சென்னிடம் உடற்பயிற்சி வகுப்பில் அறிமுகமான ஆண் நண்பர் ஒருவர் இரட்டிப்பு பணம் தருவதாக எமாற்றி அவரிடம் இருந்து 4 1/4 கோடி ரூபாயை சுருட்டிய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தி, தெலுங்கு படங்களில் முன்னனி நாயகர்களுடன் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளவர் நடிகை ரிமிசென். சினிமா வாய்ப்பு குறைந்ததால் இந்தியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸில் போட்டியாளராக நுழைந்து இறுதிவரை தொடர் இயலாமல் வெளியேற்றப்பட்டார். தன்னுடைய சினிமா பிரபலத்தை வைத்து உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

சினிமாவில் நாயகி வாய்ப்பு எப்போதாவது மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில் தினமும் ஜிம்முக்கு சென்று தீரமாக உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது அந்த ஜிம்முக்கு வந்த மும்பை கோரேகானை சேர்ந்த ரவுனக் ஜதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை தொழில் அதிபர் என்றும் நிதி நிறுவனம் நடத்துவதாகவும் ரிமி சென்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறினார்.

இதனை நம்பி முதலில் சிறிய அளவிலான தொகையை ரிமி சென் முதலீடு செய்துள்ளார். ரவுனக் ஜதினும் சொன்னபடியே இரட்டிபாக்கி கொடுத்துள்ளார் இதையடுத்து ரிமி சென் முதலீடு தொகையை உயர்த்தி செலுத்தி உள்ளார் சுமார் 3 வருடங்கள் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுத்ததால் ரவுனக் , நடிகை ரிமிசென்னுக்கு நெருங்கிய ஆண் நண்பராக இடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து தனது நண்பர்கள் உறவினர்கள் என பலரிடம் பணத்தை பெற்று சுமார் 4 1/4 கோடி ரூபாயை அண்மையில் முதலீடு செய்துள்ளார் . இந்த பணம் விரைவில் இரட்டிப்பாக தன்னிடம் வரும் என்று நம்பி காத்திருந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பாக ஆண் நண்பர் ரவுனக் ஜதின் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் இயலாததால் பணம் இரட்டிப்பாக வரும் என்று இலவுகாத்த கிளியாக காத்திருந்து ஏமாந்துபோன நடிகை ரிமி சென் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ரவுனக் ஜதின் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் , பணத்துடன் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

பெரும்பாலான நிதி நிறுவனங்கள் தங்களிடம் முதலீடு செய்தால் இரட்டிபாக பணம் தருவதாக கவர்ச்சிகரமாக அறிவித்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், வங்கி வட்டியை விட அதிகமாக வட்டி தருவதாக கூறும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் முதலீடு செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments