சென்னையில் பட்டதாரி பெண்ணிற்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது.!
சென்னையில் பட்டதாரி பெண்ணிற்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த பி.எட் பட்டதாரியான மீரா, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அரசு பணிக்காக முயன்று வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த சுந்தர் குமார் - பிரியா தம்பதி மீராவுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் பலரைத் தெரியும் எனக் கூறிய அந்தத் தம்பதி, ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மீராவிடம் பல்வேறு தவணைகளாக 10 லட்ச ரூபாயைப் பெற்றனர் என்று கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்கள் கடந்தும் அரசு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் அலைக்கழிக்கவே, மீரா போலீசில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் சுந்தர் குமார் - பிரியா தம்பதியை கைது செய்த போலீசார், சுகுமாரனைத் தேடி வருகின்றனர்.
Comments