தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

0 5542
தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வீரவல்லி டோல்கேட் அருகே ஆந்திராவில் இருந்து குண்டூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் மாவட்ட எஸ்.பி., ராகுல் தேவ் ஷர்மா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் பணம் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டுநர், கிளீனர் மற்றும் பயணிகள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments