இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக உதவி மின் பொறியாளர் கைது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், அவரது தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கோரி உத்தப்பநாயக்கனூர் உதவி மின் பொறியாளர் சக்திவேலை அணுகியுள்ளார்.
அதற்கு சக்திவேல் சசிக்குமாரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிக்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் சக்தி வேலை கையும் களவுமாக கைது செய்தனர்.
Comments