அபேசியா என்ற நோய் பாதிப்பால் சினிமாவில் இருந்து விலகிய புரூஸ் வில்லிஸ் - அபேசியா பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கம்

0 4280
அபேசியா என்ற நோய் பாதிப்பால் சினிமாவில் இருந்து விலகிய புரூஸ் வில்லிஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிசிற்கு அபேசியா என்ற நோய்பாதிப்பு ஏற்பட்டதால் அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்த நிலையில், அந்த பாதிப்பு குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அபேசியா என்பது பிறருடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் குறைபாடு என அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் அபேசியா ஆராய்சி மையம் இயக்குநர் சுவாதி கிரண் தெரிவித்துள்ளார்.

அந்நோய் பாதித்தோருக்கு பேசுவது அல்லது பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் பாதிக்கப்படும் என அவர் கூறினார். இந்நோய், எழுதும் திறன், எழுதிய வார்த்தையை புரிந்துகொள்வது, வாசிப்பதற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான சமயங்களில், பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் அபேசியா பாதிப்பு ஏற்படலாம் என சுவாதி கிரண் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பாதிப்பு குணப்படுத்தக்கூடியது என்றும் தொடர் சிகிச்சைகளால் பேச்சு, புரிதல் திறனை மீட்டெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாதிப்பிற்கான மருந்து தொடர்பான பரிசோதனைகள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், தற்போதைய நிலையில் பேச்சை மீட்டெடுக்கும் சிகிச்சையே பொதுவான சிகிச்சை முறையாக பின்பற்றப்படுவதாக சுவாதி கிரண் கூறினார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments