2022 மார்ச்சில் 17,131 கார்களை விற்ற டொயோட்டா இந்தியா நிறுவனம்.!
டொயோட்டா இந்தியா நிறுவனம் இதுவரை இல்லாத வகையில் மார்ச் மாதத்தில் 17 ஆயிரத்து 131 கார்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2021 மார்ச்சில் 15 ஆயிரம் கார்கள் விற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு மார்ச்சில் விற்பனை 14 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2021 - 2022 நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட விற்பனை 58 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 770 வாகனங்களை விற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மார்ச்சில் இன்னோவா கிரிஸ்டா மாடலில் எட்டாயிரம் கார்கள் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Comments