கொரோனா 3ம் அலையின் போது மருத்துவமனைகளில் அதிக கட்டண வசூல் - மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு

0 1689

கொரோனா மூன்றாம் அலையின் போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அதிகம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் பேசிய அவர், கொரோனாவிற்கு பிந்தைய மரணங்கள், தொற்றால் ஏற்படும் நீண்டகால தாக்கம் ஆகியவை தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பின்பற்றப்படும் சிகிச்சை முறைகள் ஆய்வு செய்யப்படுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய மன்சுக் மாண்டவியா, ஐசிஎம்ஆர் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments