விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்வு

0 1663

விமானங்களுக்கான எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத வகையில் ஆயிரம் லிட்டர் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 925 ரூபாயை எட்டியுள்ளது.

விமான எரிபொருள் விலை வழக்கமாக ஒரு மாதத்தில் இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. மார்ச் 16 அன்று ஒரே நாளில் விமான எரிபொருள் விலை 18 புள்ளி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் இன்றும் விமான எரிபொருள் விலை 2 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.  உக்ரைன் போரால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்ந்ததே இதற்குக் காரணம் என அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments