மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் - இறுதிக்கு ஒசாகா முன்னேற்றம்

0 5493

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்ச்சிச் -ஐ எதிர்கொண்ட ஒசாகா ஆரம்பத்தில் 4-6 என்ற செட் கணக்கில் பின்னடைவை சந்தித்தார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா, 6-3, 6-3 என அடுத்தடுத்த 2 செட்களில் முன்னிலை பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்((Iga Świątek))-உடன்  ஒசாகா மோத உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments