அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி - தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

0 3910

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பெண்களுக்குத் தனியாகப் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், குளிர்வசதி / குளிர்வசதியில்லாப் பேருந்துகளில் பெண்களுக்குத் தனியாகப்  படுக்கைகள் ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளைப் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண் பயணிகள் யாரும் முன்பதிவு செய்யாத போது அவற்றைப் பொதுப் படுக்கையாகக் கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments