அமெரிக்காவில் 3 மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளிகள்
அமெரிக்காவில் அலபாமா, லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல்கள் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மத்திய அலபாமா பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரொடு பெயர்ந்து விழுந்தன.
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சூறாவளி காற்றில் சிக்கிய நடமாடும் வீடு ஒன்று அப்படியே தலைகீழாக நர்த்தனம் ஆடியது. பலத்த காற்று மற்றும் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து மக்கள் இருளில் சிக்கி தவித்தனர்.
Comments