அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி பாய்ந்த மின்னல்.. பாதசாரி எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்

0 2083
அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி பாய்ந்த மின்னல்.. பாதசாரி எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்

அமெரிக்காவில் கொட்டும் மழைக்கு மின்காந்த சக்தி மூலம் மின்னல் மீண்டும் வானோக்கி பாயும் அரிய நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மிஸ்சஸ்சபி, புளோரிடா, கான்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மேல்நோக்கி மீண்டும் எழும்பிய அரிய நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது.

உயரமான கட்டடத்தின் மின்காந்த சக்தியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவும் போது இதுபோன்ற அரிய நிகழ்வு ஏற்படும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments