ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் தோல்வி

0 8790

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அரை சதம் எடுத்தார்.

210 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ வீரர்கள் சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு ரன் மழை பொழிந்தனர். 19 புள்ளி 3 ஓவர்களில் 211 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக குயின்டன் டி காக் 61 ரன்களும், எவின் லீவிஸ் 55 ரன்களும் விளாசினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments