மெக்சிகோவுக்கு கடத்தப்பட இருந்த 140 சிலந்திகள் பறிமுதல்
பொகாடோ சர்வதேச விமான நிலையம் வழியாக மெக்சிகோவுக்கு கடத்தப்பட இருந்த 140 சிலந்திகளை கொலம்பிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அங்குள்ள சரக்குப் பெட்டிகளை சோதனை செய்யும் போது வெளிநாட்டு பொருட்கள் இருப்பதாக பார்சல் நிறுவனத்திடம் இருந்து வந்த குறிப்பினை பார்த்த அதிகாரிகள் அதனை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பெட்டியில் 140 பிளாஸ்டிக் பைகளில் சிலந்திகள் தனித்தனியாக அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவைகளில் 131 சிலந்திகள் உயிருடன் இருப்பதும், 12சிலந்திகள் உயிரிழந்தும் இருப்பதும் தெரிய வந்தது. அந்த சரக்கு உரிய அனுமதி பெறாமல் வந்திருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments