மதுராந்தகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

0 2109
மதுராந்தகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களை கைது செய்த போலீசார் ஒருவருக்கு மாவு கட்டு போட்டு விட்டுள்ளனர்.

கீழவளம் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையில் கடந்த 19-ஆம் தேதி இரவு ஊழியர்களை மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இந்நிலையில், கத்தி காட்டி மிரட்டி அந்த காவலர்களை தாக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

இதுதொடர்பாக 2 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு கார், 8 இருசக்கர வாகனம், 17 செல்போன்கள், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான விக்னேஷ், கழிவறையில் வழிக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments