கேரளாவில் நடிகை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப்பிடம் நடத்திய விசாரணை நிறைவு... தீர்ப்பை ஒத்தி வைத்தது கேரள உயர்நீதிமன்றம்

0 3349

பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியைக் கொல்ல முயற்சித்ததாக நடிகர் திலீப் மீது பதிவு செய்த வழக்கில் கேரள நீதிமன்றம் விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

இவ்வழக்கை ரத்து செய்யும்படி நடிகர் திலீப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் நடிகர் திலீப்பிடமும் சாட்சிகளை கலைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை காவ்யா மாதவனிடமும் கொச்சியில் குற்றப்பிரிவு போலீசார் 3 நாளாக இறுதிக்கட்ட விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்குவதாக கூறி நீதிமன்றம் விசாரணையை முடித்து வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments