இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் வெளிநாடுகளுக்கு ரஷ்யா திடீர் நிபந்தனை
ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள் இன்று முதல் டாலர் அல்லது யூரோவில் பணம் செலுத்தாமல், ரஷ்யாவின் ரூபிள் கரன்சியில்தான் தொகையை செலுத்த வேண்டும் என்று அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ரஷ்ய வங்கிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் கணக்கு தொடங்கி பணத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்றும் புதின் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து பெறும் இயற்கை எரிவாயுவை பெரிதும் சார்ந்து உள்ளன. உக்ரைன் போர் காரணமாக சரிவுக்கு ஆளான ரஷ்ய கரன்சியை நிலை நிறுத்த இந்த உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களை மீறுவதாகும் என்று மேற்கத்திய நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன
Comments